சண்டைக்காட்சிகளே இல்லாத ஆனால் கமர்ஷியல் படம் தான் மெய்யழகன்’” ; உத்தரவாதம் தருகிறார் கார்த்தி

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ……….. ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் ( Traser ) வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். *நடிகை தேவதர்ஷினி பேசும்போது,* “96 படத்தின் இயக்கனருடன் அடுத்த படம் இது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும்போது, இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என இயக்குநர் பிரேம்குமார் கூறியதும் இரண்டு நாட்களுக்கு எனக்கு பேச்சே வர...