Actor Sona now in TV serial 'Abi Tailor' !

சீரியலில் களமிறங்கும் நடிகை சோனா ! கவர்ச்சி, காமெடி, குணசித்திரம் என கலந்து கட்டிய நடிப்பில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை சோனா. துணிவான பேச்சு, எதிலும் முன்னணியில் நிற்கும் தைரியம், சொந்த பிஸினஸ் என பல பெண்களுக்கு முன்னுதரணமாக திகழ்பவர். காமெடி கதாப்பாத்திரங்களில் இருந்து மாறுபட்டு படங்களில் துணிவான பாத்திரங்களில் கலக்கி வருபவர் தற்போது Colours Tv க்காக “அபி டெய்லர்ஸ்” சீரியலில் முன்னணி பாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். இது குறித்து நடிகை சோனா கூறியதாவது... சினிமா தான் எனக்கு அடையாளம் தந்தது. சினிமா தான் என் வாழ்க்கை. தொலைக்காட்சியில் இருந்து பல வருடங்களாகவே வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் அதில் மனதிற்கு பிடித்த மாதிரியான பாத்திரம் அமையாததால், எதையும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் “அபி டெய்லர்ஸ்” வாய்ப்பை மறுக்க முடியவில்லை. இதில் நாயகன், நாயகி மற்றும் என்னுடைய பாத்திரத்தை வைத்து தான் மொத்த கதையும் நகர்கிறது. மிகவும் வித்தியாசமான பாத்திரம். மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தமிழில் ஆ...