Thuneri Horror flick releases tomorrow!
பேய் படங்கள் என்றாலே பாலியல் காட்சிகளும்,கோரமான காட்சிகளும் மிகுந்து இருக்கும். ‘நூநேரி’ குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பேய் படம். தூநேரி திரைக்கதை நான்கு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக இடம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களோடு பேய்கள் நடத்தும் அமானுஷ்ய விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வசியப்படுத்தும். ‘தூநேரி’ நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அழகிய மலை கிராமம். பகலில் பசுமையும் வளமையும் நிறைந்த காட்சிகளை காட்டி பரவசப்படுத்தும் தூநேரி, இரவிலே கொடூரமான துர்மரணங்களை நிகழ்த்தி அச்சுறுத்துகிறது. ‘தொடர் மரணங்கள் அனைத்தையும் நிகழ்த்துவது ஒரு பேய்’ என ஒட்டு மொத்த மக்களும் நம்பி நடுங்குகிறார்கள். ஒற்றைப்பேயின் ஆட்டத்துக்கு முடிவு கட்டப்படுகிறதா? என்பதை விளக்கும் இறுதிக்காட்சி பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்துக்கு அழைத்துச்செல்லும். தூநேரி திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி ‘ஷேடோ லைட் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் சுனில் டிக்சன். சுனில் டிக்சன் அனிமேசன் கலையில் வித்தக...