இரண்டே நாட்களில் ஐந்து கோடி பார்வைகளை பெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடர் ' 'சுழல்- தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம்*

குறுகிய காலத்தில் ஐந்து கோடி பார்வைகளை பெற்று அசத்திய 'சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம் வெளியான இரண்டு நாட்களில், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு இயங்கு தளங்களிலும் 50 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ்' எனும் வலைதள தொடர் இன்றைய சூழலில் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் புலனாய்வு நாடக படைப்புகளில் ஒன்றாகும். இது நம்முடைய தேசத்திலிருந்து மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்தும் அன்பை பெற்றிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த தொடரின் முன்னோட்டம், அனைத்து மொழிகளிலும், இயங்குதளங்களிலும் உலகளவில் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. 'சுழல் தி வோர்டெக்ஸ்' மிகவும் சுவராசியமான, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வசீகரிக்கும் தொடர்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் இசை, ஒளிப்பதிவு, கலை இய...