பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர், சுழல் – தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது*.

அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது இந்த தொடர் ஜூன் 17 ஆம் தேதி பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திரையிடப்படும் புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி படைத்துள்ள சுழல் - தி வோர்டெக்ஸ் தொடரில் ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடன் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் வெளிவரும் சுழல் – தி வோர்டெக்ஸ் தொடர், தமிழ், ஹிந்தி,கன்னடம், மலையாளம் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளுக்கு மேலாக பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கிய மொழி போன்ற கூடுதல் வெளிநாட்டு மொழிகளில் டயலாக் உடன் வெளிவரும் முதல் தொடராகும். ஜூன் 17 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் சுழல் - தி வோர்டெக்ஸ் வெளியிடப்படும் என புஷ்கர் & காயத்ரியுடன் இணைந்து அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ், தலைவர் அபர்ணா புரோஹித் 2022 IIFA வீக்எண்டில், அறிவித்தார். சமீபத்திய மற்றும் பிரத்...