Posts

Showing posts from August 17, 2022

Diamond bracelets for Viruman team!

Image
  விருமனி'ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் 'விருமன்' படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார். 'விருமன்' படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனுக்கும், படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார். இந்த படத்தின் இயக்குநரான முத்தையாவிற்கும் வைர மோதிரத்தை பரிசளித்

Ss Rajamouli's assistant Ashwin directs "1770" !

Image
  பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு இயக்கத்தில் தயாராகும் '1770' சர்வதேச எழுத்தாளர் ராம் கமல் முகர்ஜியின் பங்களிப்பில் உருவாகும் '1770 ' 150 ஆண்டுகளான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கான புதிய மோஷன் போஸ்டரை வெளியிடும் ‘1770’ படக்குழு சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் ஒன்றிணைந்து, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகளானதைக் குறிக்கும் வகையிலான மோசன் போஸ்டரை வெளியிட்டனர். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வங்காள நாவலான ‘ஆன

விருமன் குடும்பத்தின் வெற்றி விழா!

Image
  சூர்யா வின்  2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்  கார்த்தி நடிப்பில்  வசூல் வாகை சூடி வருகிறது விருமன்.   இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற  நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் #விருமன் வெற்றி விழா, சென்னை வி ஜி பி கோல்டன் பீச் ரிசார்ட்ஸ் இல் நடந்தது.  விழாவின் முதலில், நடிகர் ஜெகன் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு வழியாக அழைத்து விளையாட்டு போட்டிகளை வைத்து அதற்கு பரிசுகள் கொடுத்து, ஊக்கப்படுத்தி சந்தோஷப்படுத்தினார். வையாபுரி, டீனா, முத்து, கலைராணி, இர்பான், சரவணன், செல்வா குடும்பத்தினர்கள், அனைவரும் மேடையில் சந்தோசமாக நடனமாடினார்கள். கலைராணி இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு பயிற்சி அளித்தது நான் தான் என்றார். இந்திரஜா பேசும்போது, சூரி சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த 2D நிறுவனத்திற்கும் அனைவருக்கும் நன்றி என்றார். பிறகு, நடிகர் ஜெகன் தொகுத்து வழங்க நடிகர் கார்த்தியும், நடிகை அதிதி ஷங்கரு