ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்தி ப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை நந்தினி பேசியதாவது.... இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. நடிகர் அப்துல் லீ பேசியதாவது.... ஒரு ரகசியம் சொல்றேன் ஜீவிக்கு 4 குளோன் இருக்கு, ஒண்ணு மியூசிக் போடுது, ஒண்ணு நடிக்கப்போகுது. இதை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொன்னால் அவர் நானே குளோன் தான், ஒரிஜனல் ஐஸ்வர்யா சுழல் நடிக்கப் போயிருக்கிறார் என்றார். அவ்வளவு பிஸியான...