Yashika Anand in gripping thriller R23 Criminal Diary
R 23 ; கிரிமினல்’ஸ் டைரி'யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிப்படமாக இது உருவாகிறது. தான் நடித்த குறும்படத்திற்காக சைமா விருது பெற்ற வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆதித் சுந்தரேஸ்வர், ஞானக்கிறுக்கன், உன்னால் என்னால் ஆகிய படங்களில் நடித்த ஜெகா, சூப்பர் மாடலாக இருந்து சினிமாவில் நுழைந்து கவுதம் மேனன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து பாராட்டு பெற்ற ராகேஷ் சேது ஆகியோர் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். பிக்பாஸ் மூலம் ரசிகார்கள் மனதை கொள்ளையடித்த யாஷிகா, குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்ஸ்பெக்டர் ராயப்பன் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார். இந்தப்படம் பற்றி இயக்குநர் கவுதம் ராகவேந்திரா கூறும்போது, “இந்தப்படத்தின் டைட்டில் மட்டுமல்ல, படத்தின் திரைக்கதையும் கூட இதுவரை வந்திராத புதுமையான ஒன்று தான்.. திரைக்கதையில் இது ஒரு புது முயற்