Shanthnu's Murungukkai Chips has grand audio launch!

முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட இசை வெளியீட்டு விழா! Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ( செப்டம்பர் 13 ) ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய.... நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது... நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும் ஃபேஸ்புக் மூலம் நீண்...