Posts

Showing posts from April 8, 2024

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது !!

Image
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது !!  தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.  BTG Universal நிறுவன தலைவர்  திரு.பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் செய்கிறார்.    பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று வெகு விமரிசையாக   நடைபெற்றது.  முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.  டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாகக் கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ்

உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் "காமி" திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல் திரையிடப்படுகிறது!

Image
  ~ வித்யாதர் ககிதா இயக்கியுள்ள, காமி திரைப்படத்தில்,  விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் ~ சென்னை, 3 ஏப்ரல் 2024:   இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5,  தெலுங்கு பிளாக்பஸ்டர் 'காமி' திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது.    திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, இந்த தெலுங்குப் படம் ஏப்ரல் 12 முதல், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 இல் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளது.  கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க,  அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள "காமி" திரைப்படத்தில்,  விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதாவின் தெலுங்கு படமான ‘காமி’ ஒரு உணர்ச்சிகரமான கதையையும், ஒரு அட்டகாசமான சினிமா அனுபவத்தையும் ஒருங்கே தரும் படைப்பாக அமைந்துள்ளது.  விஷ்வக் சென் மற்றும் சாந்தினி சௌத்ரியின் க