Yogi Babu in fantasy film of Malayalam director!
மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும், ஃபேண்டஸி திரைப்படம் பூஜையுடன் துவக்கம் ! மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. பெயரிடப் படாத ‘புரொடக்ஷன்1’ ஆக உருவாகும் இப்படத்தின் பூஜையில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொள்ள எளிய முறையில் நடைபெற்றது. யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் எழுத்து, இயக்கம் : ...