Posts

Showing posts from May 1, 2024

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் 'குரங்கு பெடல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Image
  'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் எழுத்தாளர் ராசி அழகப்பன், "இந்தப் படத்தின் கதை ஆறு வயதில் எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த ஒன்று. அதை படமாக்கிய இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நன்றி. சைக்கிள் கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் இதைப் பார்க்கலாம். எல்லோருமே சைக்கிள் ஓட்டியிருப்பீர்கள். அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார்.  வசனகர்த்தா பிரபாகரன், "சரியான நேரத்தில் சரியான நபர் இந்தப் படத்தை வ