கே.ஜி.எஃப், காந்தாரா வெற்றி படங்களின் வரிசையில் ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்த வெற்றி படைப்பு படப்பிடிப்பில்: ரகு தாத்தா
‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்டதிரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, 'ரகு தாத்தா'- ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம். இத்திரைப்படத்தில் 'நடிகையர் திலகமாக' வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த 'பேமிலி மேன்' வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். கோடை 2023-ல் திரையரங்குகளை சிரிப்பொலியாக்க, இம்மாதத்திலிருந்து விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தில் தேசிய விருது பெற்ற, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகங்களில் புகழின் உச்சத்தில் திகழும் நாயகியான கீர்த்தி சுரேஷுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். ஹோம்பாலே பிலிம்ஸ் இவ்வாண்டில்