Posts

Showing posts from May 31, 2025

கண்ணப்பா’ இந்திய சினிமாவில்மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - நடிகர் விஷ்ணு மஞ்சு உறுதி

Image
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு இன்று (மே 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். கண்ணப்பா படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக, நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள், மிக பிரமாண்டமாக இருப்பதோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் காட்டாத லொக்கேஷன்களாக இருக்கிறது....