மாஸ்டர் சித்தார்த் பன்னீர் ஐந்து மொழிகளில் பாடி, ஆடி நடித்த 'மிஸ் மேல கிரஷ் ' வீடியோ ஆல்பம் வெளியீடு

' கவி பேரரசு' வைரமுத்து வெளியிட்ட சித்தார்த் பன்னீரின் 'மிஸ் மேல கிரஷ்' பான் இந்திய வீடியோ ஆல்பம் நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், திரு. கடம்பூர் ராஜா, திரு. ரத்தினம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு. கருப்பையா...