Posts

Showing posts from February 9, 2024

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

Image
  அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும்  பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர்  பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது பிறந்த நாள் இன்று கோகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அவரின் பிறந்த நாள் விழாவின் போது, அவரின் பேத்தியும், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணிண் மனைவியுமான உபாசனா காமினேனி கொனிடேலா கலந்து கொண்டார். இதன் போது எழுத்தாளர் நிம்மி சாக்கோ எழுதி, அமர் சித்ரா கதா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பதிப்பித்திருக்கும் ‘அப்போலோவின் கதை’ எனும் காமிக்ஸ் வடிவிலான புத்தகம், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது.  அப்போலோ மருத்துவமனை உருவானது முதல்  பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கும் அப்போலோ மருத்துவமனையின் வரலாற

நீயே ஒளி’ இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை- சந்தோஷ் நாராயணன்

Image
‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.  இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் விஜய்குமார், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ‘மேக்கிங் மொமெண்ட்ஸ்’ அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதன் போது சந்தோஷ் நாராயணன் பேசியதாவது... உலகளவில் இசைநிகழ்ச்சி என்றால் திறந்தவெளியில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு  விருப்பமான இசையை ரசிக்கமுடியும். இசைகலைஞர்கள் இசைக்கும் இசையை நேரடியாக அனுபவிக்கமுடியும். இத்தகைய இசை நிகழ்ச்சி பொதுவாக கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும். அதற்க

ஜீ. வி. பிரகாஷ்குமார் வெளியிட்ட ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் (STARDA )

Image
தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ எனும் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராக ஜீ. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார்.  இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் அறிமுக விழா சென்னையிலுள்ள நட்சத்தி

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் 'பேபி ஜான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Image
    இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியானது.   இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பேபி ஜான்'. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்திற்கு 'பேபி ஜ

Soori at Pugazh starrer ‘Mr. Zoo Keeper’ Audio Launch

Image
T. Jeba Jones and S Rajarathnam of J4 Studios are producing a film titled ‘Mr. Zoo Keeper’, which is directed by J. Suresh, featuring ‘Cook with Comali’ fame Pugazh in the lead. A commercial entertainer, the story of this movie revolves around an ordinary man’s attempt to save a tiger. Yuvan Shankar Raja has composed music for this film.  With the film gearing up for release soon, the audio launch and press meet was held in Chennai on Wednesday (February 7), with actor Soori taking part as the chief guest.  Here are some excerpts from the event.  Producer T. Jeba Jones said, “This marks the seventh film in my production. Started on a modest budget, ‘Mr. Zoo Keeper’ has now become a grand venture. We have successfully captured the essence of the film by featuring a real tiger, a spectacle never before witnessed in Tamil film industry in the recent decades. Anticipation builds as the film is set to hit the screens soon. I extend my heartfelt gratitude to my dear friend Rajarathnam for hi