Arvind Swami's 6 Get-Ups for Vanangamudi !
ஆறு வித கெட்டப்புகளில் அரவிந்தசாமி! பரபரப்பான வணங்காமுடி! அரவிந்தசாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. 3 நாளில் 2மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஹிட் அடித்திருக்கிறது வணங்காமுடி. ‘வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக ‘வணங்காமுடி’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான இந்த டீசரில் அரவிந்தசாமியா இது? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அதே இளமையுடன் விதவித கெட்டப்புகளில் கவனம் ஈர்க்கிறார். இந்தப் படத்தில் நாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா , ஜெயபிரகாஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை ‘நான் அவன் இல்லை’ பார்ட் 1 & 2 ஹிட் படங்கள் கொடுத்த செல்வா இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குநர் செல்வா கூறியதாவது...‘‘இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்...