Posts

Showing posts from January 6, 2024

ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Image
  பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்  பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.    இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர்.  இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.   இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது… எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில்  நிரஞ்சன் ரெட்டி, அஸ்ரின் ரெட்டி,, வெங்கட் குமார் ஜெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் வர்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளால் அ

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !

Image
   தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது.  இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலைஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்துகொண்டனர். இந்தியா சினிமா என்றாலே ஆடல் மற்றும் பாடலுக்குப் பெயர் பெற்றது. இங்கு சினிமாக்கலை உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சினிமாவில் மற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட அளவிற்கு நடனக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்து வருகிறது. தமிழ்த் திரைப்படம் உருவாகத்தொடங்கிய 1938களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். அனைத்து நடனக்கலைஞர்களையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்த இந்த டான்ஸ் டான் விருது விழா நடைபெற்றது.  வயதில் மூத்த கலைஞர்கள் பலரின் சாதனைப்பயணம் AVயாக இவ்விழாவில் ஒளிப