திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !

மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக பிரபலங்களும், தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர். அக்டோபர் 12 அன்று, DMY கிரியேஷன் நிறுவனர் மற்றும் (மேலும் DMY என அறியப்படும்), தலைவர் டத்தோ முஹம்மது யூசாஃப், தனது மகன் ஃபஜ்ருல் ரஹ்மானுக்கு, செட்டியா நகரில் அமைந்துள்ள கன்வென்சன் சென்டரில், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தம்பதிகளின் திருமணத்தைக் குறிக்கும் நிக்கா விழா, அங்கு அரங்கேறுகிறது. நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இரு காதல் மனங்களின் ஒருங்கிணைவு கொண்டாடப்படவுள்ளது. இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும், கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர். மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இவ்விழா பெரும் கவர்ச்சியுடன் கலாச்சார அடையாளமாகவும் நிகழவுள்ளது. ...