Posts

Showing posts from July 1, 2023

பாட்னர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

Image
 பாட்னர்' பத்திரிகையாளர் சந்திப்பு அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை வி சசிகுமார் மேற்கொண்டிருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகர்கள் ஆதி, பாண்டியராஜன், ஜான்விஜய், ரோபோ சங்கர், நடிகை ஹன்சிகா மோத்வானி, ஒளிப்பதிவாளர் ஷபீர் அஹமது, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகிய படக் குழுவினருடன், இயக்குநர்கள் ஏ. சற்குணம், தங்கம் சரவணன், தாஸ் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக

“ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் பாடலாசிரியர் கணேஷ் ராகவேந்திரா பேசியதாவது… காமெடி கலந்த ஒரு சுவாரஸ்யமான படம் கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள். அனைவருக்கும் நன்றி. பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, முதலில் சின்னசாமி சாருக்கு நன்றி, இந்த படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன், இயக்குநர் இரண்டு பாடலை எழுதினார், நான் கிருஷ்ணா சாருடன் இணைந்து பணிபுரிகிறேன் அவரின் கதை தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும், இசையமைப்பாளர் எனக்கு பெரும் ஒத்