Rajini film wraps up shoot !

" ரஜினி " படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி " A.வெங்கடேஷ் இயக்குகிறார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக செரின் நடிக்கிறார். மற்றும் வனிதா, மூக்குத்தி முருகன், குக் வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடவிருக்கிறார். ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது... படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது தற்போது டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாதமாக பிரீ புரொடக்சன் பணியை சிறப்பாக செய்ததால் இத்தனை நடிகர்களை வைத்து ஒரே கட்டமாக...