Posts

Showing posts from June 16, 2022

திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட 'சுழல் தி வோர்டெக்ஸ் '*

Image
  அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்' எனும் வலைதள தொடர், இதனை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி, தங்களுடைய திரையுலக நண்பர்களுக்காக பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டனர். இன்றைய தேதி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் வலைதளத் தொடர், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்'. இந்த தொடர் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாவதால், தயாரிப்பாளர்களும், பார்வையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த தொடருக்கான பிரத்யேக திரையிடலை, இதனை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களுடைய தொழில்துறை நண்பர்களுக்காக மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ஆர். பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், நிவேதிதா சதிஷ், தொடரின் இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் ஆகியோருடன் விஜய் சேதுபதி, எஸ். ஜே. சூர்யா, ஹன்சிகா மோத்வானி, நிவேதா பெத்துராஜ், அதிதி பாலன், லொஸ்லியா, ரம்யா பாண்டியன், கௌரி கிஷன், மைனா, தர்ஷா குப்தா, அதுல்யா, யாஷிகா ஆனந்த், பிரசன்னா, சினேகா, சாந்தனு, 'ஜெய்பீம்' புகழ் மணிகண்டன் ஆகிய திரை நட்சத்திரங்கள்