ரோமியோ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 'ரோமியோ' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சவுண்ட் டிசைன் விஜய் ரத்னம், "விஜய் ஆணடனியுடன் எனக்கு பத்தாவது படம். எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்து வரும் விஜய் சாருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்". சவுண்ட் மிக்ஸிங் & மாஸ்டரிங் ரஹமதுல்லா, "விஜய் ஆண்டனி சாருடன் எனக்கு பத்தாவது படம். வழக்கமான கதையாக இல்லாமல், சூப்பராக வந்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்". காஸ்ட்யூம் டிசைனர் ஷிமோனா...