Lubber Pandhu on Disney Hotstar for Feepavali !

*லப்பர் பந்து மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்* டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்... கெத்து, அன்பு இருவரும் விருந்து கொடுக்க வருகிறார்கள் ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து” அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவைச் சுற்றி நடக்கும் ஒரு...