Posts

Showing posts from January 5, 2024

சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா !

Image
சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம்  ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள,  இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்.. நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது… இந்தப்படத்தில் தனுஷை நான் பக்கத்திலிருந்து பார்த்தேன். தனுஷ் உழைப்பு பிரமிப்பாக இருந்தது. அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். ஷூட்டிங்கில்  நாங்கள் ஒரு மலையில் இருப்போம், அவர் அடுத்த மலையில் தூரத்தில் நிற்பார். இப்படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளார். இயக்குநர் அருண் மிகச்சிறப்பாகப் படத்தை உருவாக்கியுள்ளார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு  நன்றி.  நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது..  நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ஃபேன். அருண் ப்ரோவுக்கும் நான் ஃபேன், இருவரும் இணையும் இந்தப்படத்தில் வேலைபா