Enna Vaazhka Da album launched !

* SAREGAMA & NOISE and GRAINS இணைந்து வழங்கும் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடல் வெளியீடு!* SAREGAMA & NOISE and GRAINS நிறுவனங்கள் இணைந்து, ரக்ஷன் சுனிதா, ஸ்வஷ்திஸ்டா மற்றும் GP முத்து ஆகியோர் நடிப்பில் “என்ன வாழ்க்கடா” ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. இப்பாடலை டாங்க்லி இயக்கியுள்ளார். நேற்று 23.09.2021 மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் தங்கள் சமுக வலைத்தள பக்கம் மூலம் இப்பாடலை வெளியிட்டனர். தென்னிந்தியாவில் SAREGAMA Originals உடைய முதல் ஆல்பம் பாடலாக இப்பாடல் வெளியாகிறது. இப்பாடலின் அறிமுக விழா நேற்று பத்திரைக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அனைவர் முன்னிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்பாடலை வெளியிட்டார். *இந்நிகழ்வில் SAREGAMA நிறுவனம் சார்பாக B R விஜயலக்ஷ்மி பேசியதாவது* SAREGAMA இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமைமிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமு...