Posts

Showing posts from July 6, 2022

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”

Image
  தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர்.
 இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மற்றும் சாவி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர். வெல்டன், கடைசி பெஞ்ச் கார்த்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் “மூத்தகுடி” படத்தின் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
 விசாகப்பட்டினத்தை சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
 இப்படத்தில் R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழம்பெரும் நடிகை K.R.விஜயா நடிக்கிறார். 1970களில் கோவில்பட்டி அருகில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்குகிறார்கள். எனவே 1970 மற்றும் 1980களில் உள்ளது போன்ற இடங்களை தேர்வு செய்து படப்படிப்பு நடத்துகின்றனர். கோவில்பட்டி, சாத்தூர், சங்க...