Posts

Showing posts from May 26, 2022

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது !*

Image
  இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும்   ரசிகர்களின் பேராதரவை பெற்ற,  நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா, பிதாமகன்” என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாரட்டுக்களை பெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலை தூண்டியது. சமீபத்தில்  இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்படம் நிறுத்தப்படுவதாக படம் குறித்து சில தவறான தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.  இந்நிலையில் வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்த

வம்பில் சிக்கிய ‘வாய்தா

Image
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புதுமுகங்கள் என்றால் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒருசிலர் இருப்பார்கள். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் 'வாய்தா'. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் 'வாய்தா' படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.'ஜோக்கர்', 'கே.டி. என்கிற கருப்பத்துரை' ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், 'நக்கலைட்ஸ்' புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்ததோடு, அரசியல் கட்சி தலைவர்கள் நல்லக்கண்ணு, முத்தரசன், டி.ராஜா, கே.பாலகிருஷ்ணன், சி.மகேந்திரன், சீமான் மற்றும் திரைப்பிரபலங்கள் பொன்வண்ணன், நாசர், கவிதா பாரதி உள்ளிட்ட ஏராளமானோரது பாராட்டுக்