Posts

Showing posts from May 15, 2024

மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் இணைந்து நடத்தும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரி !! இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா ! இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது… தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்கான அறிவிப்பை பத்திரிக்கையாளர்களாகிய உங்கள் முன்னால் தொடங்க வேண்டுமென்பது ஐயா இசைஞானி இளையராஜாவின் ஆசை, உங்கள் முன் இந்த போஸ்டரையும் டிக்கெட்டையும் வெளியிடுவது மகிழ்ச்சி. ஐம்பதாயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட விழாவாக இந்த இசை விழா நடக்கவுள்ளது. இந்த இசை கச்சேரியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற கச்சேரிகளில் ஏற்பட்ட சிக்கல்கள், அதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாப்பாட்டு பொருட்கள் அனைத்தும் வெளியில் கிடைக்கும் விலையில் உள்ளேயே கிடைக்கும் படி, வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசிதி முதல் குடி தண்ணீர் வசதி வரை அரங்கத்திற்குள் எளிதாக அனைவரும் அணுகும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழாவிற்கான டிக்கெட்டுகளை பேடிஎம் மூலம் மட்டுமே பெற முடியும். டிக்கெட் பார்ட்னராக இணைந்துள்ள பேடிஎம் நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இதன் மூலம் டிக்கெட்கள் கைமாறுவது போலி டிக்கெட்கள் பிரச்சனைகள் தடுக்கப்படும். மேலும் இசை விழாவிற்கு வருகை புரிபவர்கள் வந்து செல்ல எளிமையாக இருக்கும் வகையில், அவர்கள் இலவசமாக பயணிக்க சென்னை மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்கள், சென்னையின் பலபகுதிகளிலிருந்து வந்து போகும் வகையில் பயன்படுத்த தனியார் வாடகை பைக், வாடகை கார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத மிகப்பிரம்மாண்ட விழாவாக இருக்கும். இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகளை நீங்கள் உங்கள் பேடிஎம் (Paytm) செயலி மூலம் எளிதாக பெறலாம்.

Image
இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா !  இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட  இசைஞானி  இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.  இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும்  பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ்  நிறுவனங்களின் சார்பில்  அமைப்பாளர்கள் கலந்துகொள்ள  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.   இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது… தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, நடத்துவதில் பெருமிதம் கொள்க...

விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
  *ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில், ''  தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து அறுபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன், ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு, படத்தொகுப்பாளர் பிரேம்குமார், கலை இயக்குநர் ...

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது - இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது

Image
  J.R.R.டோல்கியன் -இன் பழம்பெரும் புகழ் பெற்ற வில்லன் சௌரன் (sauron) .மிடில் எர்த்தின் செகண்ட் ஏஜ் -ஐ இருளடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான அரங்கை இந்த புதிய சீசன் நிர்மாணிக்கிறது  மும்பை, இந்தியா- மே 16, 2024 - பிரைம் வீடியோ, அதன் எதிர் வரவிருக்கும் மாபெரும் வெற்றித்  தொடர் 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் :ரிங்ஸ்  ஆஃப் பவர்" இன் இரண்டாவது சீசனின் முதல் காட்சியை அமேசானின் முதல் முதலான அறிமுக நிகழ்ச்சியில் நியூயார்க் நகரத்தில் நேற்று காலை வெளியிட்ட போது, அதில் கலந்துக்கொண்ட பார்வையாளர்கள் பின்னோக்கி மிடில் எர்த் காலத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தொடரின் முதல் சீசன் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் மாபெரும் வெற்றியை  பெற்றது. அத்துடன் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்த ஒன்றாகவும் மற்றும் அதன் வெளியீட்டு நாள் முதல் இன்றைய தேதிவரை வேறு எந்த  ஒரு வெளியீட்டுக்கும் இல்லாத வகையில் உலகம் முழுவதிலிருந்தும் பிரைம் சைன் அப்களை அதிகளவில் பெற்று பிரைம் வீடியோவின் ஒரு தலைசிறந்த ஒரிஜினல் வீடியோவாகவும் திகழ்...