நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
”ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு கிடைத்த வெற்றி தான் இறுகப்பற்று ” ; வெற்றிச்சந்திப்பில் நெகிழ்ந்த விக்ரம் பிரபு சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ‘இறுகப்பற்று’ படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதுவதற்கு ஜஸ்டின் பிரபாகரன் தான் காரணம். ஏற்கனவே அவருடன் இணைந்து பல படங்களில் எழுதியிருந்தாலும் இந்த படத்தில் பாடல் எழுதியது ஸ்பெஷல் என்று சொல்லலாம். இப்படத்தின் காட்சிக...