Posts

Showing posts from May 27, 2024

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Image
  கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.  இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.  ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.   இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறு...