Posts

Showing posts from March 18, 2022

Grand Selfie Audio Launch !

Image
 *வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம் - மிஷ்கின்* அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக்குழுவினருடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இயக்குனர் மதிமாறன் பேசும்போது, ‘விழாவிற்கு மிஷ்கின் சார் வந்ததில் எனக்கு பெருமை. இது நன்றியுரையாக எடுத்துக் கொள்ளலாம். வெற்றிமாறன் சார் என் குறும்படத்தை பார்த்து என்னை உதவிய