Heroine Vinothini returns after 16 years!

16 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் ‘வண்ண வண்ண பூக்கள் வினோதினி ! மணிரத்னம் சாரை சந்தித்து, நான் ஒன்று சொல்ல வேண்டும் - நடிகை வினோதினி ! “வண்ண வண்ண பூக்கள்” படம் மூலம் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்களின் மனதை கிறங்கடித்தவர் நடிகை வினோதினி. 12 வருடங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்தவர் தற்போது மீண்டும் திரையில் நடிக்கவுள்ளார். இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது. கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த...