அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !

தமிழ் இணைய ஓடிடி உலகில் ஜீ5 தளம், தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இத்தளத்தின் அடுத்த படைப்பாக ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. “கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்." இந்த தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் பிரியா V பேசியதாவது…. வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. கண்ட நாள் ...