Posts

Showing posts from December 23, 2024

மோகன்லாலின் " பரோஸ்" திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !

Image
  Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான " பரோஸ்", திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது., இந்நிகழ்வினில்… வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது… மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லால் சாருடன் பணிபுரிந்த பிறகு தான், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனது வாழ்க்...