Vadivelu emotional as he returns to cinema with Lyca Film!

என்னுடைய நகைச்சுவைப் பயணம் தொடரும் - 'வைகைப்புயல்' வடிவேலு. 'எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை' என 'வைகைப்புயல்' வடிவேலு தெரிவித்தார். ( See speech video ) லைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,'' கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன்...