ஐமா ' திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
'ஐமா ' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த 'ஐமா 'திரைப்படத்தில் யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத் தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் ராகுல் ஆர் .கிருஷ்ணா இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு விஷ்ணு கண்ணன், எடிட்டிங் அருண் ராகவ், இசை கே .ஆர். ராகுல்.பாடல்கள் அருண் மணியன். தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி விழாவில் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி பேசும்போது, 'நான் ஐடி துறையில் இருந்தவன்.எனக்கு சினிமாவின் மீது ஆர்வமுண்டு. நடிப்பின் மீது மோகம் இருந்தது. ஒரு நடிகராக நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க முடியாது.அது எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நானே ஒரு படத்தைத் தயாரித்து அதில் நடிப்பதாக ம