Posts

Showing posts from September 6, 2022

முழு நீள அரசியல் படமாக உருவாகும் "கட்சிக்காரன்” கதையின் நாயகனாக களமிறங்கும் விஜித் சரவணன்

Image
திரையுலகில் அரசியல் சார்ந்த படங்கள் எத்தனையோ  வந்துள்ளன. ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும்  உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும்  புது விதத்தில் கூறுகிற படமாக 'கட்சிக்காரன்' உருவாகி உள்ளது. அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்  தான் கதை.ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் இணை தயாரிப்பு புளூஹில்ஸ் புரொடக்ஷன், சார்பில் தயாரித்துள்ளனர். இதில் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விஜித் சரவணன். இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார் ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்க. ''காதல் முன்னேற்ற கழகம்' படத்தில்  வில்லனாக நடித்த சிவசேனாதிபதி   கட்சிக்காரன் படத்தில் அரசியல் தலைவராக சிறப்பாக நடித்து உள்ளார்... காமெடியனாக AR தெனாலியும் நடித்திருக்கிறார்கள். அப்புக்குட்டி, மற