Posts

Showing posts from January 22, 2023

தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன் - நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

Image
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன் . இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்பட குழுவினர் பேசியதாவது நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, லக்ஷ்மன் சார் மற்றும் வெங்கட் சாருக்கு நன்றி. ரன் பேபி ரன் படம் நன்றாக வந்திருக்கிறது. பாலாஜி பிரதரோட தேர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் நன்றாக கதை தேர்வு செய்வார். இருவருமே கதாபாத்திரத்திற்குள் பொருந்தி போவார்கள். தளத்தில் இருவரும் பேசிக்கொள்ளும்போதே கதையிலும், கதாபாத்திரத்திலும் தங்களால் முடிந்ததை சிறப்பாக கொடுப்பார்கள். சராசரி மனிதனின் பார்வையிலே தான் சிந்திப்பார்கள். ஆகையால் தான் இருவருக்கும் தொடர்வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜிக்கும், மக்கள் செல்வி ( ஐஸ்வர்யா ராஜேஷ்) க்கும் நன்றி என்றார். படத்தொகுப்பாளர் மதன் பேசும்போது, லஷ்மன் சார் ஒரு நாள் போனில் அழைத்து ஒரு க