Posts

Showing posts from December 13, 2023

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
  'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது  இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.  இந்நிகழ்வினில் ..   ZEE5 சார்பில் ஷ்யாம் திருமலை பேசியதாவது..  6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிறப்பான சீரிஸுடன் வந்துள்ளது ZEE5. நிறைய பேர் பாஸிடிவ் ரிவ்யூ தந்திருக்கிறீர்கள். பிரபா மூலம் தான் இந்த சீரிஸ் நடந்தது. அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய எஸ் ஆர் பிரபு சாருக்கும் நன்றி. முக்கியமாக மூன்று பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்கள் மூவர் தான் இந்த சீரிஸுன் கிரியேட்டிவ் டீம்.  ஜெய்சந்திர ஹாஸ்மி, இவர் தான் இந்த சீரிஸுக்காக முதன் முதலில் பேசினார். இந்த சீரிஸை எழுதியிருக்கிறார். சமீபத்த