என்னுடைய திரைத்துறையில் மாளிகப்புரம் மிக முக்கியமான படம் - நடிகர் உன்னி முகுந்தன்

மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகப்புரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது.மிகுந்த எதிபார்ப்புகுரிய இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சிறப்பு காட்சி நடைப் பெற்றது. முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடை பெற்றது. படத்தில் இடம் பெற்ற கலைஞர்கள் பேசினார்கள். இப்படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது.. இந்த மாதிரி படத்திற்கு நான் பாடல் எழுதுவேன் என்று நினைக்கவில்லை. அதற்கு ஐயப்பனின் அருள் தான் காரணம் என்று நினைக்கிறேன். நான் திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது, என்னுடன் படிக்கும் மாணவனுக்கு மூளையில் கட்டி. இரவு நேரத்தில் நானும், என் நண்பனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர் மண்டை வெடிக்கப் போகிறது என்று கூறினார். அவருடைய பெற்றோர்கள் ஊரில் இருக்கிறார்கள். அப்போது, என்னுடைய நண்பன் ஐயப்பனுக்கு வேண்டுதல் வைத்தார். இவனுக்கு சரியாகிவிட்டால், நாங்கள் மூவரும் மாலைபோட்டு சபரிமலைக்கு வருகிறோம் என்று வேண்டினான். அவன் பிழைத்துவிட்டான். இன்றுவரை நன்றாக இருக்கிறான்.அந்த சம்பந்தமோ ...