Posts

Showing posts from July 25, 2022

பதினான்காவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் ஸ்ருதிஹாசன்

Image
நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கமல்ஹாசன் - சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக 'லக்' எனும் இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' எனும் படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து '3', 'பூஜை', 'புலி', 'வேதாளம்', 'சிங்கம் 3', 'லாபம்' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் திரையுலகில் பணியாற்ற தொடங்கி பதிமூன்று ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். இதற்காக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, காணொளி ஒன்ற

Vattam readies for OTT release !

Image
  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக,  உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் SR பிரபு கூறியதாவது.., கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம்.  இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும். நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து இந்த படத்திற்குள் அவரை கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்த படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்த படத்தை மெருக்கேற்ற பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து

விஷாலின் லத்தி பட கோலோகல விழா !

Image
  லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது; நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார்! - உதயநிதி ஸ்டாலின் வரலாற்று படைக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் ஐயா பெயரும் இடம்பெற வேண்டும் - உதயநிதியிடம் விஷால் கோரிக்கை இப்படத்தின் டீஸர் வெளியானதும் பார்க்கிறேன்; எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் - நடிகை சுனைனா தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது : நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த படத்தில் அடி வாங்காத ஆள் இல்லை. டீஸரில் 'ஊர்ல இருக்க பொறுக்கி பொறம்போக்கு எல்லாம் என்னை போட்டு தள்ள தாண்டா த