நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !
Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் "ரேக்ளா" பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டி...