Posts

Showing posts from April 2, 2024

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !

Image
 Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகை, தயாரிப்பாளர் குஷ்பு பேசியதாவது… இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளும், ஹாரர் திரைப்படங்களுக்கு ஃபேன். எனவே தான் அவரும் இந்த ஜானரில் தொடர்ந்து படமெடுக்கிறார். அரண்மனை படத்தை சோறு கட்டிக்கொண்டு வந்து திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்கும் ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்க