சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆஹா வைஸ் பிரசிடெண்ட்டும் கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா பேசியதாவது, "ஆஹா, தமிழில் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. மலையாளத்தில் உணர்வுப்பூர்வமான கதைகள் வரும்போது அதனை கொண்டாடுகிறோம். ஆனால், தமிழ் சினிமா என்று வந்து விட்டால் கமர்ஷியல் படங்கள்தான் என்ற ரீதியில் அணுகுகிறோம். அப்படி இல்லாமல் தமிழிலும் புத்திசாலித்தனமான கதைகள் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஆஹா நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில்தான் 'சிங்க்' படமும் வந்துள்ளது. புதுமுயற்சியை ஊக்குவிக்கும் இடத்தில் ஆஹா தமிழை அனைவரும் வைத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வழக்கமான ஹாரர் ஜானர் படங்களின் கதையில் இருந்து 'சிங்க்' வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. நீங்கள் பார்த்துவிட்டு உங்கள்