Posts

Showing posts from January 19, 2024

இந்த ஆண்டு பொங்கல் விழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் & குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான்

Image
  FRIENDS FILM FACTORY யுடன் இணைந்து  இந்த வருடம் பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் மற்றும் குழந்தைங்களுடன் கொண்டாடியுள்ளார்    இசையமைப்பாளர் - D. இமான் . இது பற்றிய விவரம் வருமாறு :- தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய இன்னிசை  பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் , உசிலம்பட்டி அருகே  பொங்கல் பண்டிகையை ஒட்டி  அப்பகுதி கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தன் வாயிலாக  ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டும் வருகிறார். பல தரப்பட்ட உதவி கேட்டு வருபவர்களுக்கு  அவர்கள் கேட்கும் உதவிகள் செய்வதுடன், பலருக்கும் பலவிதமான  உதவிகளை  தானே தேடிப்போய் செய்தும் வருகிறார்.  இசையமைப்பாளர் D..இமான் அவர்கள் ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு சென்று அங்குள்ளவர்களை இந்த தைத்திருநாளில் ஊக்குவித்தது  உசிலம்பட்டி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்த விழாவை FRIENDS FILM FACTORY TEAM  மற்றும் BUTTERFLY NETWORK TEAM  ஆகிய இரு நிறுவன

ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Image
  Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியதாவது..  இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர் என ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். நடிகை ரியா சுமன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். தனா சார் 24 மணி நேரமும் இந்தப்படத்தையே நினைத்துக் கொண்டிருப்பார். இரவு பகலாக படத்திற்காக உழைத்துள்ளார். விஜய் ஆண்டனி மனிதநேய மிக்க மாமனிதன் அவர். அவரது சொந்தப் படத்தை விட இந்தப் படத்தின் மீது அக்கறை கொண்டு என்னிடம் எப்போதும் விசாரித்துக் கொண்டிருப்பார். அவரது மனதிற்கு நன்றி. “ஹிட்லர்” மிகச் சிறந்த படைப்பாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  எடிட்டர் சங்