'மங்கை' படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.- நடிகை கயல் ஆனந்தி

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும் போது... அனைவருக்கும் வணக்கம். மிகவும் மகிழ்வான தருணம். இந்த மேடையில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கார்த்திக் அவர்களுக்கு. அவர் மூலமாகத் தான் நான் இந்தப் படத்திற்குள் வந்தேன். அன்பின் சங்கிலியால் அன்பின் பிணைப்பால் எவ்வளவு கட்டி இழுத்தாலும் வலிக்காது. கார்த்திக் அண்ணாவின் அன்பு அப்படிப்பட்டது. மேலும் சிலருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். அதில் முதலானவர் குபேரன் அண்ணா அவர்கள். 'மங்கை' போன்ற பொறுப்பான படங்களை அவர் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். 'மங்கை' ...