Regina Cassandra's next, Anya's Tutorial ready for OTT release on Aha !

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. ஆஹா தமிழ் சார்பில் அஜித் தாகூர் கூறியதாவது.., ஆஹா எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் புதுமையான கதைகள் கொண்ட படைப்புகளை வெளியிடுகிறது. 190 நாடுகளில் ஆஹா ஓடிடி வெற்றிகரமாக ஸ்ட்ரீம் ஆகிறது. அதற்கு உங்களது ஆதரவு தான் காரணம். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஆஹா தமிழ் தளத்தை நிறுவினோம். இப்போது 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு தனிப்...