சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் 'செஞ்சி

வழக்கமான சினிமாவின் வணிக சூத்திரங்களில் இருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான கதையை எடுத்துக் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் 'செஞ்சி' இப்படத்தை,கணேஷ் சந்திரசேகர் இயக்கி தனது ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். தயாரிப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கிரீன் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இருக்கிறது.இப்படத்திற்கு பெங்களூரைச் சேர்ந்த ஹரீஷ் ஜிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார்.என்.வி. முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார் .ஆனந்த் மற்றும் உன்னி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளனர். ஏற்றுமதி வணிகத்தில் இறங்கி உழைப்பால் வெற்றிப் படிகளில் ஏறி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் கணேஷ் சந்திரசேகருக்கு சினிமா மீது அளவற்ற காதல். திரைப்படங்களைப் பார்த்து, திரை நுட்பங்களைக் கற்றுக் கொண்டவர், தன் மனதிற்குள் உதித்த கதையை 'செஞ்சி' என்கிற ஒரு படமாக எடுத்து முடித்துள்ளார் . படம் பற்றி அவர் கூறும்போது, "செஞ்சி என்கிறபோது செஞ்சிக்கோட்டை நினைவிற்கு வருகிறது. செஞ்சி என்றாலே அதில் உள்ள மர்மங்களும் புதைக்கப்பட்ட வரலாற்று அதிசயங்களும் நினைவிற்கு வரும். அதனால்தான் அதை நினைவூட்டும் வகையில் செஞ்சி எ...