சரத்குமார் வழியில் ஜெய் ஆகாஷ்.... அஜீத் தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் கே. ராஜன் பேச்சு
ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக தயாரிக்கும் படம் "ஜெய் விஜயம்", இப்படத்தை ஜெய்தீஸன் நாகேஸ்வரன் (ஜெய் ஆகாஷ் ) இயக்கி உள்ளார். இதில் அக் ஷயா கண்டமுத்தன் (விஜய் டி வி ஆஹா கல்யாணம் சீரியல் ஹீரோயின்) கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா. சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதன் இசை யமைப்பாளர் சதீஷ் குமார். சன் டி வி, விஜய் டி வியில் பல முறை சேம்பியனாக கலக்கின மைக்கேல் அகஸ்டின் காமெடி வேடத்தில். முதன்முறை இதில் நடிக்கிறார். *விழாவில் ஹீரோ ஜெய் ஆகாஷ் பேசியதாவது:* இப்படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்த எல்லோருமே பாராட்டினார்கள். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தின் எடிட்டர் ஏ.சி.மணி கண்டன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோல் ஒளிப்பதிவாளர் பால்பாண்டி இடைவிடாமல் ஷூட்டிங் நடந்தபோது முகம் சுழிக்காமல் பணி யாற்றினார். ஜெய் விஜயம் என்று படத்துக்கு டைட்டிலை வைத்ததற்கு காரணம் என் பெயர் ஜெய், விஜயம் என்றால் வெற்றி. இதற்கு முன்பு "அமைச்சர் ரிட்டர்ன்" என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படம் செய்தேன். எவ்வளவு செலவு செய் தாலும்